சற்று முன்
Home / செய்திகள் / பலாலியில் சரணடைந்தார் மாவை !!

பலாலியில் சரணடைந்தார் மாவை !!

வலி வடக்கில் குறிப்பாக பலாலியில் ஒரு அங்குல நிலமேனும் விடமாட்மோம் என போர்முரசு கொட்டிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணியின் ஆரம்ப நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சா்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளின் தொடக்க விழா இன்று பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றது.

19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று பலாலி விமான நிலையத்தில், இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளை அங்குரா்ப்பணம் செய்தாா்.

இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் மற்றும் சிறிலங்கா அமைச்சர்களுடன் இணைந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தார்.

முன்னர் பல தடவை பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பான பேச்சுக்கள் எழுந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்த மாவை சேனாதிராஜா ஒரு அங்குல நிலமேனும் பறிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என போர் முரசு செய்துவந்திருந்த நிலையிலேயே பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் ஆர்வத்துடன் அரச பிரதிநிதிகளோடு இணைந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com