பலமான தமிழ்க்கட்சி உருவகுவதை ஜ.தே.க விரும்பவில்லை – தமக்கு கூஜா தூக்கும் தலைமையையே விரும்புகிறது

பலமான தமிழ் கட்சி உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை. அப்படி உருவாகினாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக செயற்படும் கட்சியாகவே இருக்கவேண்டும் என ஜக்கிய தேசியக் கட்சி விரும்புவதாக குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் மனோகணேசன் நல்லாட்சி அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து எந்த பயனும் இல்லை ஏனெனில் அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ மகாத்மாகாந்திகளோ இல்லை என தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

பலமான தமிழ் கட்சி உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை.

ஜனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறது. எனவும் கூறினார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுடன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல.

சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என. அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள்.

அரசில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை.

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கை எதனையாவது செய்துள்ளதா? என எனக்கு தெரியாது. ஆனால் இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தபோது அங்கு கூறப்பட்ட விடயங்களை நான் பார்த்தேன்.

அதில் புதிதாக ஒன்றையும் கூட்டமைப்பு கூறவில்லை. முன்னரே கூறி வந்த விடயங்களை ஞாபகப்படுத்தியிருந்தார்கள். மேலும் நாங்களும் உடன்படிக்கை எதனையும் செய்யவில்லை. அரசிடனான உடன்படிக்கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. இது வரை எத்தனை உடன்படிக்கைகள் செய்யப்பட்டது? அவற்றுக்கு என்ன நடந்தது?

ஆகவே நாம் செய்யும் உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com