பயிற்சியின்போது மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் காயம்

நுவரெலியாவில் இடம்பெறுகின்ற வசந்தகால நிகழ்வுகளில் ஒன்றான மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றுக்கான ஒத்திகை பார்க்கும் வேளையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பொலிஸார் ஒருவர் காயமடைந்ததுடன் மேற்படி மோட்டர் சைக்கிள் பந்தய வீரர்க்கு கால் முறிவடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் 16.04.2016 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் 16.04.2016 அன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பெண் பொலிஸார் மற்றும் மோட்டர் பந்தயத்தை பார்வையிட சென்றிருந்த பொதுமக்கள் சிலர் இவ்விபத்தில் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த மோட்டர் பந்தய ஒத்திகையில் குறித்த மோட்டர் வீரர் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கும் நுவரெலியா பொலிஸார் சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பந்தய வீரரை உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பெண் பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்சசை பெற்ற வருகின்றனர்.photo (2) photo (4) Presentation1 Presentation2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds