பயங்கரவாதியான பிள்ளையானை நான் ஜனநாயகத்திற்கு கொண்டுவந்தேன் – இந்த அரசு அவரை பயங்கரவாத சட்டத்தில் சிறைவைத்துவிட்டது – மகிந்த

mahinda6-626x380பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் இந்த அரசாங்கத்தில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் யுத்த வீரர்களின் நினைவு தூபியை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரின் ஆத்மசாந்திக்காகவும் காயமடைந்தவர்களுக்கு ஆசிவழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்சிசியடைகின்றேன்.

கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்தது.

காத்தான்குடி படுகொலை, இந்து மதகுரு சுட்டுக்கொல்லப்பட்டமை, அருந்தலாவையில் இளம்பிக்குகள் சுட்டுக்கொல்லப்பட்டவை போன்ற சம்பவங்கள் நினைவுகூறும்போது இந்த கொடிய யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கலாம், சிங்களவர்களாக இருக்கலாம் முஸ்லிம்களாக இருக்கலாம் அவர்கள் அனைவரும் இந்த நாட்டுமக்களாகும்.

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் இந்த யுத்ததினால் பெரும்பாதிப்புக்குள்ளாகினர். இளம் வயதினர் இந்த யுத்ததினால் உயிரிழக்கும் நிலையேற்பட்டது. இவையனைத்தையும் நிறுத்தி சமூக நிலையை ஏற்படுத்திய போர் வீரர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் கொண்டவர்களாகவுள்ளோம்.

ஒரு காலத்தில் கழுத்தில் சயனைட்டுகளை அணிந்துகொண்டிருந்த பிள்ளைகளுக்கு நாங்கள் கைகளில் பேனாக்களையும் கழுத்தில் பஞ்சாயுதத்தினையும் கொடுத்துள்ளோம்.எங்களது பிள்ளைகளுக்கு இழந்த கல்வியை கொடுக்க எங்களால் முடிந்தது.பல வருடங்களாக இந்த நாட்டில் உள்ள வடக்கு கிழக்கு தெற்கில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வியை சிரான முறையில் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிருந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. யுதத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித கதியில் மீளக்கட்டியெழுப்ப முடிந்தது.

தற்போதுள்ள அரசியலமைப்பில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் நிலையுள்ளது. ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதனை செய்யக்கூடிய நிலையுள்ளது. ஆனால் இன்று இந்த நாட்டினை இரண்டாக உடைக்க சிலர் முயற்சி செய்துவருகின்றனர். இன்னும் சிலர் வடகிழக்கினை இணைத்து ஒரு அலகாக்கவேண்டும் என்கிறன்னர். இன்னும் ஒரு பகுதியினர் தற்போதுள்ளவாறே இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். சிலர் தனித்துச்சென்று தனி இராஜ்ஜியம் உருவாக்கவேண்டும் என்கின்றனர். இதற்கு அடிபணிந்தால் ஒன்றுபட்ட இனங்கள் சிதறிவிடும் நிலையேற்படும். மீண்டும் பகைமையுனர்வு ஏற்படும் நிலையேற்படும்.

இந்த நிலைமையேற்பட்டால் நாட்டில் கட்டியெழுப்ப முற்படும் நல்லிணக்கம் இல்லாமல் போய்விடும் நிலையேற்படும். இந்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு புதிய அரசியலமைப்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

புதிய அரசியல்யாப்பினை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றமுடியும் என்று கூறுகின்றார்கள. பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றலாம் என்று நினைப்பது பிழையாகும். இவற்றிக்கு இடமளிக்கமுடியுமா என்பதே இன்று நாட்டில் எழுந்துள்ள கேள்வியாகும்.

நாட்டில் இன்று மிகமோசமான அடக்குமுறை காணப்படுகின்றது. நான் கூறுவதை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதில்லை. துண்டுதுண்டாக போடுகின்றனர். ஆளும் கட்சிக்குள்ள முறைகேடுகள், பிரச்சினைகளை வெளியில் வராமல் தடுக்கப்படுகின்றது. பயம் காரணமாகவே இவ்வாறு செய்யப்படுகின்றது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகங்கள் ஊடாக தனிக்கை செய்யப்படுகின்றது.

ஊடக அடக்குமுறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு தற்போதுதான் ஊடக சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். இந்த நாடு சிலரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏகாதிபத்தியத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com