சற்று முன்
Home / செய்திகள் / பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்பு – முன்று அமைப்புக்களுக்கு தடைவிதிக்கும் வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்பு – முன்று அமைப்புக்களுக்கு தடைவிதிக்கும் வர்த்தமானி வெளியீடு

நாட்டில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதன்படி, தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய 3 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இந்த அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதி சிறிசேன தடை விதித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் இந்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர, குருநாகலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டோரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com