“பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயும்” – தமிழரசின் அடியாட்கள் மிரட்டல் ! (ஓடியோ இணைப்பு)

 

தம்மை அகிம்சைக்கட்சியென சொல்லிக்கொள்ளும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களது அடாவடி நாள் தோறும் உச்சமடைந்துவருகின்றது. தனது முறைகேடுகள் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவரது வயோதிப பெற்றோரை பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலம் மிரட்டிய வேட்பாளர் ஒருவர் பற்றிய தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

நல்லூர் கல்வியங்காடு பகுதியினை சேர்ந்த சமூக செயற்பாட்டளர் ஒருவர் தான் தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் சிங்கப்பூரிலிருந்து குறித்த தமிழரசுக்கட்சி வேட்பாளரது கடந்த கால ஊழல் மோசடிகள் பற்றி அம்பலப்படுத்தி வந்திருந்தார்.

இதனால் குறித்த தமிழரசுக்கட்சி வேட்பாளரது போலி முகத்திரை கிழிந்ததையடுத்து அவசர அவசரமாக தனது நண்பர்களான பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலம் குறித்த செயற்பாட்டாளரது வயோதிப பெற்றோரை மிரட்டியமை அம்பலத்திற்கு வந்துள்ளது. தன்னை பற்றி சமூக ஊடகங்களில் செய்திகளை பிரசுரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டுமென வலியுறுத்தியே அவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனையும் குறித்த சமூக செயற்பாட்டாளர் அவ்வாறு மிரட்டப்பட்டதையும் துணிந்து அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள குறித்த நபர் வீடு சென்று மிரட்டியவர்களுடன் தொடர்புகொண்டபோது எங்களிடம் பலம் இருக்கிறது. நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிப்போம் என மிரட்டியாத குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஒலிப்பதிவு ஆதாரம் வாகீசத்துக்குக் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com