பயங்கரவாதச் சட்டத்தில் – விக்ரர் உட்பட ஆறு பேர் கைது – வாள்வெட்டு சூத்திரதாரிகளாம் !!

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஆறு பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு சம்பவத்திற்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபர் என அண்மையில் பொலிஸ்மா அதிபரால் குறிப்பிடப்பட்டிருந்த விக்ரர் உள்ளிட்ட நால்வர் கொழும்பில்வைத்தும் ஏனைய இருவர் யாழ்ப்பாணத்தில் வைத்தும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆறுபேரும் யாழ்ப்பாத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டபோதிலும் கைது செய்யப்பட்ட ஏனையவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட நால்வரையும் யாழ்ப்பாணம் அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பொலிசார் மீதான வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com