பயங்கரவாதச் சட்டத்தில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்கள்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் விபரங்கள்உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விவரங்கள் அரசால்வெளியிடப்பட்டுள்ளன.

லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.24 ரக ஹெலியைச் சுட்டுவீழ்த்தியமை, பயணிகள் பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை, பொதுஇடங்களில் தாக்குதல்கள் நடத்தியமை, அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்டகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 70சந்தேகநபர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படாது பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலையுடன் தொடர்புடையகுற்றச்சாட்டில் சகாதேவன்மற்றும் ஆரோக்கியநாதன் ஆகியோர் கொழும்பு மகஸின்சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்தகுற்றச்சாட்டில் பொன்னுச்சாமி கார்த்திகேசு, சிவலிங்கம் அருண், பத்மநாதன் ஐயர்சிறி, சந்திரபோஸ் செல்வச்சந்திரன் மற்றும் ஸ்கந்தராஜாஆகியோர் கொழும்புமகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பிரமுகர்களை இலக்கு வைத்து தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்த உதவிய குற்றச்சாட்டில் ரஞ்சித் சந்திரசிறி பெரேராமற்றும் கந்தவன் கோகுலநாதன் ஆகியோர் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர்கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்த உதவியகுற்றச்சாட்டில் ஜெயராம் இராமநாதன் அல்லது ரமேஷ் என்பவர் கொழும்பு மகஸின்சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ள மற்றும் முன்னாள் இராணுவத் தளபதிசரத் பொன்சேகா ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தம்பிஐயா பிரகாஷ், சண்முகலிங்கம் சூரியகுமார்ஆகியோர்கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும், லக்ஷ்மன் குரேகொழும்புவிளக்கமறியல்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்அப்துல் ஹமீத் உமர் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர்கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்த உதவியகுற்றச்சாட்டில் சண்முகநாதன் தேவகன், பாக்கியநாதன் ஜூரியன், பெனடிக் தேவதாஸ்நிர்மல் மற்றும் சிவராசா சுதன் ஆகியோர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும்,  இராமையா சிவராமலியஸ் தம்பி கொழும்பு விளக்கமறியல்சாலையிலும்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதியமைச்சர் தஸநாயக்கவை படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மெல்கம் திரோன் அல்லது பிரசன்னா நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுபெத்தவில் பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் என்.குகதாசன் மகஸின் சிறைச்சாலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலயில் பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர்க் குண்டுத் தாக்குதலுடன்தொ டர்புடைய குற்றச்சாட்டில் சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரன் ஆகியோர் மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் விமானப்படை முகாம் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்  இராசவலன் தவரூபன், புருஷோத்தமன் அரவிந்தன் ஆகியோரும், 4 பொலிஸாரின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கலிங்கன் விஜயகுமார், லக்ஷ்மன் மோகன்ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுப்ரமணியம் சுபேந்திரராஜா அல்லது ராஜா, மகேந்திரன் மதனி, முத்துசிவம்சிவானந்தன், பி.மனோகரன், யோகராஜா நிரோஜன் ஆகியோர் கொழும்பு மகஸின்சிறைச்சாலையிலும்,

சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் தங்காலை சிறைச்சாலையிலும்,

கந்தையா இளங்கோ, வைரமுத்து சரோஜா ஆகியோர் காலி சிறைச்சாலையிலும்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏ.அருள்பிரகாஷ், ஐ.ஜெகன், என்.சிவலிங்கம், ஜி.தர்ஷன் ஆகியோர் யாழ்ப்பாணம்சிறைச்சாலையிலும்

எம்.சுலக்ஷன், எஸ்.தில்லைராஜ், நந்தராசா சரவணபவன்,ஆர்.டி.தர்மதாஸ, அந்தோனிப்பிள்ளை மரியசீலன், எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர்அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com