பத்து இலட்சம் தொழில் வாய்ப்பில் மலையகமும் உள்வாங்கும் – அமைச்சர் திகாம்பர்ம் தெரிவிப்பு

pm (11)நாட்டில் பத்து இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பை உருவாக்க போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இவ் வேலை வாய்ப்பில் மலையக இளைஞர், யுவதிகளும் உள்வாங்க வாய்ப்பினை பெற்றுத் தருவேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதயா அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டனில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர் சேர்க்கும் வைபவம் ஒன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் காலம் ஒன்றில் தலவாக்கலை நகரத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த போது அங்கு உரை நிகழ்த்துகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கு கிராமங்கள் இருக்கின்றது.

ஆனால் அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் திகாம்பரத்திற்கு கிராமங்களை அமைத்துக் கொடுப்பேன் என்ற உறுதிப்பாட்டுக் அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மலையக பெருந்தோட்ட பகுதிகளை கிராமங்களாக்க பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளார்.

இன்று மலையக மக்கள் சந்தோஷமான வாழ்க்கை முறையை முன்னெடுத்து செல்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது ஐக்கிய தேசிய கட்சி.

ஒரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்த நான் அன்றைய அரசியல் நடவடிக்கையில் மாற்று கட்சிகளின் வேற்றுப்பாகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஆளாகிய நிலையில் நானும் கே.கே.பியதாஸவும் ஒதுங்கி வாழ்ந்தோம்.

ஆனால் தமக்காக ஒரு பாதுகாப்பு தேவை என்பதினை கருத்திற் கொண்டு மாற்று கட்சியில் இணைந்தோம். இருந்தும் நிம்மதி அற்ற நிலையில் இருந்த நாம் நல்லாட்சி அரசாங்கத்த உருவாக்கி மீண்டும் இணைந்துள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மூவின மக்களும் சமதானமாக வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 9, 10 வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மிக மோசமான இனவாத ஆட்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலைமை இன்று மாற்றம் பெற்றுள்ளது. அத்தோடு எதிர்காலத்தில் இடம்பெறும் உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவதற்கான வேலைத்திட்டங்களையும் மக்கள் ஆதரவனையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று அட்டன் நகரத்திற்கு வருகை தந்திருக்கும் நாட்டின் பிரதமரை மிக கௌரவத்துடனும், பெருமையுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்கின்றது என அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com