பத்தாவது நாளாகவும் தொடரும் தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்..

சம்பள உயர்வை வலியுறுத்தி மலையத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தாவது நாளாகவும் 05.10.2016 அன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் 05.10.2016 அன்று காலை முதல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஸ்டோனிகிளிப் தோட்டத் தொழிலாளர்கள், அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து, கொட்டகலை நகரில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது தொழிலாளர்கள் தங்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கோஷம் எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிலாளர்களும் நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியை மறித்து போகாவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை பொகவந்தலாவ பகுதியில் தோட்ட மக்கள் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

பொகவ்நதலாவ, கொட்டியாகலை, ஜெப்பல்டன், டின்சின், கெம்பியன் ஆகிய தோட்ட மக்கள் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நானுஓயா, லிந்துலை, டயகம, மெராயா ஆகிய பகுதி தோட்டங்களிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
அத்தோடு அட்டன் மல்லியப்பு சந்தியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தொழிலாளர் தேசிய சங்க முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.img_1665 img_1669 img_1670 img_1685 vlcsnap-2016-10-05-11h24m10s161

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com