இலங்கை சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பேரில் பத்தனை ஸ்ரீபாத கல்வியில் கலாசாலையின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களை இணங்கண்டு குணப்படுத்தும் மருத்துவ சேவை வழங்கும் நிகழ்வு ஒன்று 13.10.2016 அன்று நடைபெற்றது.
கல்வியில் கலாசலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசாலையின் பீடாதிபதி உள்ளிட்ட கொட்டகலை பிராந்திய பொது சுகாதார வைத்திய பணிமனையின் வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ் மற்றும் தாதிமார்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது சுகாதார பரிசோதகர் பாஸ்கரன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சீனி நோய் உள்ளிட்ட இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் போன்றவையுடன் தொற்ற நோய்களில பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்கு மேற்குறித்த நோய்களுக்கான பரிசோதனைகள் இடம்பெற்றது.
நாட்டின் சுகாதார அமைச்சு ஊடாக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போன்றோர்களுக்கு நோய் அறிகுறிகளை கண்டறிவது மட்டுமன்றி நோயில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விரிவுரை மற்றும் கருத்தரங்குகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஓர் வேலைத்திட்டமாக பத்தனை ஸ்ரீபாத கல்வியில் கலாசாலையில் 13.10.2016 அன்று மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், சேவையாளர்கள் என பலரும் இந்த மருத்துவ சேவையின் ஊடாக பலன் பெற்றமை மேலும் குறிப்பிடதக்கது.