பண்ணையில் படகு விபத்து! இருவரைக் காணவில்லை!

யாழ்ப்பாணம் பண்ணைக் கடல் வழியாக குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இப்படகில் பயணம் செய்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இருவரைக் காணவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திற்கு படகொன்றில் நான்குபேர் பயணித்துள்ளனர்.

இடைநடுவில் படகு கவிழ்ந்ததில் நான்குபேரும் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இருவரை அலை அடித்துச் சென்றுவிட்டதாகவும், தேடுதல் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com