பணிக்கு திரும்பாவிட்டால் பணிவிலகுவீர்கள் – அதிரடி காட்டும் அரசாங்கம்

எரிபொருள் விநியோகம் அத்தியவசிய சேவையாக நேற்றிரவு  வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளதால், அச்சேவை தொடர்பான அனைத்து பணியாளர்களும் தங்களது பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியவசிய சேவை ஒன்று பிரகடனப்படுத்தப்படுமிடத்து, உரிய சேவை தொடர்பில்  பணிக்கு திரும்பாதோர், பணியிலிருந்து தானாக நீங்கிச் சென்றதாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் வழமைக்கு கொண்டு வந்துள்ளதால், குறித்த சேவை மற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் பவுசர்களை, உரிய எரிபொருள் களஞ்சியத்திற்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், குறித்த பணியில் ஈடுபடாத தனியார் பவுசர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com