பணம் திருடியவருக்கு விளக்கமறியல்

புத்தூர் கலைமதி பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கதவினை உடைத்து ஒரு இலட்சத்து 5ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய சந்தேக நபரான 18 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதமன்ற நீதிவான் நேற்றுமுன்தினம் (10) உத்தரவிட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற இத் திருட்டு சம்பவத்தினை கண்ணுற்ற ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவும், வீட்டு உரிமையாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com