பட்டா வாகனம் மோதி முதியவர் காயம் -புத்தூரில் சம்பவம்

பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியின் புத்தூர் பகுதியில் துவிச்சக்கரணவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவரை வேகக்கட்டுப்பாட்டை இழந்த பட்டா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான முதயவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளது. நீர்வேலி மேற்கு பகுதியினை சேர்ந்த சோமு செல்வராசா வயது(64) என்ற நபரே காயங்களுக்கு உள்ளானவர் ஆவார். விபத்து ஏற்பட்டதை அடுத்து அப் பகுதியில் கூடிய இளஞர்கள் வாகனத்தின் சாரதியினை கடுமையாக தாக்கியதில் அவரும் வைத்தியசாலையில் சிகிச்கை;காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விபத்துடன் தொடர்புடைய வாகனம் பொலிஸ் நிலையம் எடுத்துவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்;டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com