சற்று முன்
Home / செய்திகள் / பட்டம் விட்ட சிறுவன் பரிதாப மரணம் – சாவகச்சேரியில் சம்பவம்

பட்டம் விட்ட சிறுவன் பரிதாப மரணம் – சாவகச்சேரியில் சம்பவம்

யாழ். சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் நேற்று (19) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த போது தவறுதலாக பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனும், 8 வயதுடைய சிறுவனும் பட்டம் ஏற்றக்கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் கிணற்றில் விழுந்ததை பார்த்த 8 வயதுடைய சிறுவன் பயத்தில் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியதன் பின்னர் பிரதேசவாசிகள் சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னரே அவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com