பட்டதாரிகள் நேர்முகத் தேர்வில் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே புள்ளிகள் – யாழ். அரச அதிபர்

அரச வேலையற்ற பட்டதாரிகளிற்கான நேர்முகத் தேர்வில் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிகள் அமைவதனால் சகல பட்டதாரிகளும் தவறாது சான்றிதழ்களை சேகரித்து சம்ப்பிக்குமாறு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வேலையற்ற பட்டதாரிகளில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பிற்காக 2 ஆண்டுகள் பயிற்சி அடிப்படையில் நியமனம் வழங்குவதற்காக எதிர் வரும் 18ம் திகதி முதல் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது. இதற்காக ஏற்கனவே தமது பதிவுகளை மேற்கொண்டு நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல பட்டதாரிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ள தவறியமை சுட்டிக்காட்டப்பட்டது.இதன் அடிப்படையில் 2016-12-31ற்கு முன்பு பட்டப்படிப்புக்களை நிறைவு செய்தும் ஏற்கனவே தமது பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய அனைவரும் எதிர்வரும் 20ம் திகதிவரை தமது பதிவுகளை மாவட்டச் செயலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் பட்டதாரிகள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பட்டதாரிகள் தமது பட்டச் சான்றிதழுடன் மேலதிக பட்டங்கள் , இரண்டாம் மொழி , கணணிச் சான்றிதழ் , சிறப்புத் தகமைகள் பட்டதாரிகள் முன்னுரிமைப் படுத்தும் ஆகையினால் எமது மாவட்டப் பட்டதாரிகள் இவற்றினையும் முன்கூட்டியே சேகரித்து சமர்ப்பிப்பதன் மூலம் நேர்முகத் தேர்வில் சிறந்த தேர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் . என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com