சற்று முன்
Home / செய்திகள் / பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம் – பொலிசார் நீர்த்தாரைப் பிரயோகம்

பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம் – பொலிசார் நீர்த்தாரைப் பிரயோகம்

வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேருக்கும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுத்தனர்.

அவர்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டு காலைக்க முற்பட்டபோதும் அவர்கள் தொடர்ச்சியாக போரைாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைக்கும் நேர்முகத் தேர்வில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.
எனினும் கோரப்பட்ட தகுதி நிலைகளின் அடிப்படையில் சுமார் 20 ஆயிரம் பட்டதாரிகளே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனம் அடுத்த மாதம் வழங்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந் நிலையிலேயே வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்துக்கான அறிவிப்பை விடுத்திருந்தது.

அதனடிப்படையில் வேலையற்ற பட்டதாரிகள் நாடு முழுவதிலிருந்தும் தலைநகர் கொழும்புக்கு படையெடுத்து தமது கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இன்று (8) முன்னெடுத்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com