பட்டதாரிகள் அரச நியமனங்களுக்காகக் காத்திருப்பது நியாயமற்றது – அமைச்சர் தயாசிரி ஜயசேகர

பட்டதாரிகள் அரச நியமனங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது நியாயமற்றது. அனைவருக்கும் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கிறேன் என்று விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஊடகவியாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு வரையான அனைத்துப் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் பட்டங்களை நிறைவு செய்த உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு இன்னும் நியமனங்கள் வழங்கப்படவில்லை. இறுதியாக நியனங்களைப் பெற்ற பட்டதாரிகளில் பலர் இன்று மரநிழல்களில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக சம்பளம் பெறுகின்றோம் என்றுகூட அவர்களுக்குத் தெரியாது.
உண்மையில் பட்டதாரிகள் அரச நியமனங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது நியாயமற்றது. அனைவருக்கும் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கின்றேன். அனைவருக்கும் அரச நியமனங்களை வழங்கி அவர்களுக்கான சம்பளத்தை கொடுப்பதென்பது மிகவும் கடினமான காரியம். அவர்களுக்குள் தனியார் துறையில் பணிபுரிவதற்கு உகந்த மனோநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com