பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

வேலையில்லாப் பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதேடு தடியடிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழுமிபிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – லோடஸ்ட் வீதியில் வைத்தே இவ்வாறு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தமக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி அரசிற்கு காலக்கேடு விதித்து மாவட்டம்தோறும் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்ட பட்டதாரிகள் கடந்த 14 ஆம் திகதி அரசுக்கு தாம் விதித்த காலக்கேடு முடிவுற்றதாகத் தெரிவித்து இன்று அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பட்டதாரிகள் கொழும்பு புகையிர நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிப்பதற்காக பேரணியாகச் சென்றபோது கொழும்பு – லோடஸ்ட் வீதியில் வைத்து அவர்களைத் தடுத்து நிறுத்திய போலிசாரிற்கும் பட்டதாரிகளிற்குமிடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைக்கலப்பு ஏற்பட்டதாகவும் அதனையடுத்து பொலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொண்டேதோடு தடியடி மற்றும் நீர்பாய்ச்சி ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைக்க முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

அதன் கொழும்பு – லோடஸ்ட் வீதியில் மீண்டும் ஒன்றுகூடியுள்ள பட்டதாரிகள் தமது அடுத்த கட்ட செயற்பாடு தொடர்பான கலந்தாய்வில் ஈடுபட்டிருப்பதாக யாழ் மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com