சற்று முன்
Home / செய்திகள் / படையினர் நிகழ்வுகளில் மாணவர்கள் !! – உடன் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

படையினர் நிகழ்வுகளில் மாணவர்கள் !! – உடன் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

வடமாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுவதை உடனடியாக தடுக்கவேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு கல்வி அமைச்சு உடனடியாகவே நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதமளித்துள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் (30) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கருத்து தெரிவிக்கையில், பனங்காட்டுக்குள் புத்தி கூர்மை என தலைப்பிட்டு படையினர் நிகழ்வு ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருக்கின்றது. இந்நிகழ்வில் மாலை 6 மணிக்கு பின்னர் பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இராணுவம் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் படைமுகாமுக்குள் நடத்தவேண்டும் அதற்கு பாடசாலை மாணவர்களை அழைக்க கூடாது என கூறினார்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பாடசாலை மாணவர்களை படையினரின் நிகழ்வுகளுக்கு அழைப்பதை நிறுத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். என தீர்மானிக்கலாமா? என கேட்டதுடன் கல்வி அமைச்சு அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் கூறினார்.

அதன்போது கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இவ்வாறான நிகழ்வு நடைபெற்றமை தொடர்பாக எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் நடக்கின்றபோது முன்னதாகவே எமக்கு தெரியப்படுத்துவார்கள் இந்த நிகழ்வுக்கு தெரியப்படுத்தவுமில்லை. எனவே இந்த விடயம்
தொடர்பாக அவதானிக்கப்படும் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com