சற்று முன்
Home / செய்திகள் / படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திர தினத்தில் நினைவுகூரப்பட்டனர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திர தினத்தில் நினைவுகூரப்பட்டனர்

சர்வதேச பத்திரிகை தினம் இன்று (03.05.2018) உலகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று (03) யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டனர்.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.மாநர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் , வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com