படகு விபத்தில் மாணவர்கள் பலி!

இம் முறை உயர்தர பரீட்சை எடுத்த 16மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

5 இளைஞர்களின் சடலங்களை கடற்படையினர் மற்றும் குருநகரை சேர்ந்த மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த 16 பேரில் 05 இளைஞர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஏனைய 15 பேரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கவிழ்ந்த படகிலிருந்து தப்பி வந்த ஒருமாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்களெனவும் இன்று நடைபெற்ற உயர்தர பரீட்சையை முடித்துக்கொண்டு பொழுது போக்கிற்காக சிறுதீவு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்கிய போதே இந்த கோர நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com