சற்று முன்
Home / செய்திகள் / பசிலின் மேன்முறையீடு நிராகரிப்பு!

பசிலின் மேன்முறையீடு நிராகரிப்பு!

திவிநெகும நிதி முறைகேடு குற்றச்சாட்டு வழக்கு விசாரணை தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்ய மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும நிதியில் 29 மில்லியன் ரூபாவை முறைகேடாக பாவித்ததாக பசில் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உயிர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக கிஹான் குலதுங்க உள்ளதால், வழக்கு விசாரணையை வேறொரு நீதிபதி அமர்விற்கு மாற்றும்படி பசில் ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான தீர்ப்பு இன்று (27) வழங்கப்பட்டது.

பசில் தரப்பின் கோரிக்கையை நியாயப்படுத்த போதுமான சமர்ப்பணங்கள் செய்யப்படவில்லையென தெரிவித்து, அவரது கோரிக்கையையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com