பங்காளிகளைப் பந்தாடும் தமிழரசு – நாடாளுமன்றக் குழுவே கூடும் – ஒருங்கிணைப்புக் கூட்டமில்லை !

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை என்பன தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினால் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. புளொட் அமைப்பும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியிருந்தது. எனினும் அக் கோரிக்கைககள் நிராகரிக்கப்பட்டு இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், நடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, எந்தக் கூட்டம் தொடர்பிலும் தனக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com