பங்களிக் கட்சிகள் புறக்கணிப்பு – தமிழரசுக் கட்சி தனித்து மேதினம்

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

பங்காளிக் கட்சிகள் யாவும் புறக்கணித்திருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின வைபவம் தனித்து தமிழரசுக் கட்சியின் மேதினக் நிகழ்வாக மருதனார்மடத்தில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக் கட்சியின் ஏனைய பங்களிக் கட்சிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் ஆகிய பங்களிகள் புறக்கணித்திருந்த நிலையில் சில நூற்றுக்கணகாகனவர்களோடு குறித்த மேதின நிகழ்வு முடிவுற்றிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினம் என அழைப்புவிடுக்கப்பட்டிருந்தபோதும் அழைப்பிதழில் இருந்து பேச்சாளர்கள் வரை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியமையும் தம்மை வெறும் பார்வையாளர்களாகவே நிகழ்விற்கு அழைத்தமையுமே நிகழ்விற்கான புறக்கணிப்பிற்கு காரணம் என பங்காளிக் கட்சிஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூறிக்கொண்டாலும் அனைத்து விடையங்களிலும் பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளி தமிழரசுக் கட்சியில் அங்கம்வகிக்கும் ஒரு சிலரே எவ்விடையத்திலும் முடிவெடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மேதினக் கூட்டதைப் புறக்கணித்திருந்தபோதும் வடக்கு மாகாண சபையின் கூட்டுறவு அமைச்சர் ங்கரநேசன் தலைமையில்  கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பசுபதி அரியரத்தினம், சு. பசுபதிப்பிள்ளை, த. சிவநேசன், வ. கமலேஸ்வரன், ம. தியாகராஜா, இ. இந்திரராஜா, எம். பி. நடராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

One comment

  1. பங்காளிகள் புறக்கணித்தாலும் மேதினம. சிறப்பாக இருந்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds