பகிடிவதைக் குற்றச்சாட்டு பேரா. பல்கலை மாணவர்கள் 15 பேர் கைது

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் புதிதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மெகொடகளுகமுவ பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள வீடொன்றில் வைத்து பகிடிவதையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாட்டை அடுத்து இன்று அதிகாலை பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், பகிடிவதைக்குள்ளான மாணவர்கள் 8 பேர், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com