நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்தும் தொடர்பாக சர்வமதங்களையும் சார்ந்தவர்களினால் சமாதான பேரணி

நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்தும் தொடர்பாக சர்வமதங்களையும் சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று 06.11.2016 அன்று இடம்பெற்றது.

தேசிய சர்வமதங்களுக்கான சமாதான பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் சமூக பொது அமைப்புகள் அதன் அங்கத்தவர்கள் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மூவினத்தை சேர்ந்த மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நோர்வூட் பிரதேசத்தில் கடந்த காலங்களில் மதங்களுக்கிடையிலான கோட்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என தேசிய சர்வமதங்களுக்கான சமாதான பேரவையிடம் வழியுறுத்தியதையடுத்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியானது நோர்வூட் சிங்கள வித்தியாலயத்தின் அருகில் ஆரம்பிக்கப்பட்டு நோர்வூட் நகரம் வரை சென்று மீண்டும் சிங்கள வித்தியாலத்தை வந்தடைந்தடைந்தது.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் சமாதானத்தை பேணும் வகையில் பதாதைகள் ஏந்தியவண்ணம் பேரணியில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.photo-1 photo-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com