நோட்டன்பிரிட்ஜில் வாகனங்கள் பரிசோதனை….

நோட்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் (பஸ்,வேன்,முச்சக்கரவண்டி) மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் என அனைத்தையும் 09.09.2016 அன்று காலை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மற்றும் நுவரெலியா மோட்டார் வாகன பரிசோதகர் எம்.எம்.ஜே.சீ பண்டார ஆகியோர் வாகனங்களை திடீர் சோதனைக்குட்படுத்தினார்கள்.

நோட்டன்பிரிட்ஜ் போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் இவ் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது 20 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பபட்டது.

எனினும் வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து பொலிஸ் நிலையத்தில் பரிசீலனை செய்யுமாறு நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மற்றும் நுவரெலியா மோட்டார் வாகன பரிசோதகர் எம்.எம்.ஜே.சீ பண்டார ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.dsc03145 dsc03199 dsc03224 dsc03286

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com