நேபாளத்தில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது 23 பேர் பலி!

நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென மாயமாகி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து,  சுமார் 200 கிலோ மீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு 23  பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
இந்த விமானம், போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை திடீரென இழந்து மாயமாகி உள்ளது.

தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டினர், இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 18 பயணிகளும், விமானி, பணியாளர்கள் என மொத்தம் 23 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விமானம், மலைப்பகுதி அருகே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்நாட்டு விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
இந்நிலையில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds