சற்று முன்
Home / செய்திகள் / நெடுந்தீவில் ரூபா 45 இலட்சம் மாகாண நிதி ஒதுக்கீட்டில் முறைசாராக் கல்வித் தொழிற்திறன் பயிற்சி நிலைய திறப்பு!

நெடுந்தீவில் ரூபா 45 இலட்சம் மாகாண நிதி ஒதுக்கீட்டில் முறைசாராக் கல்வித் தொழிற்திறன் பயிற்சி நிலைய திறப்பு!

வடமாகாண கல்வி அமைச்சின் 2016 ஆம் ஆண்டிற்குரிய மாகாணம் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி (PSDG) ஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க.பாடசாலை வளகாத்தில் தீவக கல்வி வலயம் முறைசாராக் கல்வி தொழிற்திறன் பயிற்சி நிலையத்தினை அமைப்பதற்கு சிபாரிசு செய்திருக்கின்றது.
அதனடிப்படையில் கட்டட நிர்மாணம் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) தீவகக் கல்வி வலயப் பணிப்பாளர் திரு. சு. சுந்தரசிவம் அவர்களின் தலைமையில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

கட்டடத்திற்கான பெயர்ப்பலகையை தீவக வலயப் பணிப்பாளர் திரைநீக்கம் செய்து வைக்க, நிகழ்வின் பிரதம விருந்தினரான வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கே. என். விந்தன் கனகரத்தினம் நாடாவை வெட்டி தொழிற்திறன் பயிற்சி நிலைய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகக் நெடுந்தீவு கல்விக் கோட்ட அதிகாரி திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ், தீவக கல்வி அபிவிருத்தி பிரதிப் பணிப்பாளர் திரு. எஸ். கணேசராசா ஆகியோரும் இன்னும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப் பயிற்சி நிலையம் மூலம் பாடசாலைகளில் கல்வியினை நிறைவு செய்த மாணவர்களும் கல்வியை தொடர முடியாது இடைவிலகிய மாணவர்களும், பல்துறைசார் தொழிற்திறன் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நிகழ்வில் இரு போதனாசிரியர்களுக்கு வலயப் பணிப்பாளர் நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும், அணிவகுப்பும் இடம்பெற்றது. இறுதியாக யாழ். வேலணை சரஸ்வதி வித்தியாலய அதிபர் திரு. ஜெயகரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது. இந் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களை நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. பாடசாலையின் அதிபர் திருமதி பாக்கியநாதன் செல்வராணி நெறிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com