“நெடுந்தாரகை” வெள்ளோட்டத்தின் பின் சேவை இடம்பெறவில்லை எனக் குற்றச்சாட்டு

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து வசதியை இலகுபடுத்தும் நோக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட நெடுந்தாரகை படகு குறித்து எதிர்வரும் 9ம் திகதி மாகாணசபையில் இடம்பெறும் அடுத்த அமர்வில் தெளிவுபடுத்தப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் 83ம் அமர்வு நேற்றையதினம் நடைபெற்றது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்திற்hக புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட நெடுந்தாரகை´ படகு வெள்ளோட்டத்தின் பின்னர் அதன் சேவை இடம்பெறவில்லை என்று நேற்றைய வடமாகாண சபை அமர்வின் போது சுட்டிக்காட்டினார்.

மாகாணசபை உறுப்பினர் கவிந்தன் இதுதொடர்பாக சபையில் தெரிவிக்கையில் இநத சபையின் சேவைக்கான 6 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களால் இதனை செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். கடற்படையினர் ஆரம்பத்தில் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தனர் ஆனால் அந்த ஒத்துழைப்பு தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com