சற்று முன்
Home / செய்திகள் / நெடுங்கேணி பிரதேச சபை எதேச்சதிகாரம் – உறுப்பினர்கள் போர்க்கொடி

நெடுங்கேணி பிரதேச சபை எதேச்சதிகாரம் – உறுப்பினர்கள் போர்க்கொடி

நெடுங்கேணி பிரதேசசபையின் எதேச்சதிகாரமான செயற்பாட்டினை நெடுங்கேணி பிரதேசபை உறுப்பினா்கள் வன்மையாக கண்டித்திருக்கின்றனா். இது தொடா் பாக உறுப்பினா்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.வவுனியா வடக்கு பிரதேச சபையினால் இன்றைய தினம் அம்மாச்சி உணவகம் (வன்னி அறுசுவையகம் ) வைபவ ரீதியா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வில் இன்றைய நிகழ்வு தொடர்பில் சுமார் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபரையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்றைய நிகழ்விற்கு முன்னால் ஜனாதிபதியை அழைப்பது என தவிசாளரால் எமக்கு தெரிவிக்க வில்லை.நேற்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட அழைப்பிதழில் ஊடாகவே அறிந்து கொண்டோம். அதனால் இன்றைய நிகழ்வை புறக்கணித்துள்ளோம்.

அத்தோடு இன்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடந்த மாத சபை அமர்வு கூட்டறிக்கையில் முன்னால் ஜனாதிபதியை அழைப்பது எனவும் சபை நிதியிலிருந்து 30000.00 ரூபாய் அதன் செலவீனங்களுக்காக ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக

தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள து.மேலும் சபை அமர்வுகளின் ஆரம்பத்தில் அம்மாச்சி உணவகம் என்றே எமக்கு தவிசாளரால் அறிமுகபடுத்தப்பட்டு பல மாதாந்த அறிக்கைகளிலும் எழுத்து மூலமாக எழுதப்பட்டும் இருக்கின்றது.இன்நிலையில்

திடீரென அதன் பெயர்பலகை மாற்றம் பெற்றதனையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தொடர்ச்சியாக தவிசாளர் அவர்கள் முன்னால் வவுனியா மாவட்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார்.

ஆகவே அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அம்மாச்சி உணவகம் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொளவதோடு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்தோடு வருகின்ற 14ம் திகதி நடைபெற உள்ள சபை அமர்வில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு

தொடர்பில் சரியான பதிலை தவிசாளர் அவர்கள் எமக்கு வழங்கவேண்டும், அவ்வா று தவறும் பட்சத்தில் சபை அமர்வை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளோம். புறக்க ணி க்கப்பட்டஉறுப்பினர்கள்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com