சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / நூலகம் திறந்து வைப்பு

நூலகம் திறந்து வைப்பு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகரும், தலைவர் மறைந்த அமரர். வீ.கே.வெள்ளையன் அவர்களின் ஞாபகார்த்தமாக பொகவந்தலாவை முத்துலெட்சுமி தோட்டத்தில் நூலகம் ஒன்று 04.12.2016 அன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜியின் பண்முகப்படுத்தப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் கட்டியமைக்கப்பட்ட இந்த கட்டிடத்தை மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் பிறந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவராகவும், பிரபல தொழிற்சங்க மற்றும் அரசியல்வாதிகள் ஒருவருமாக திகழ்ந்த அமரர். வீ.கே.வெள்ளையன் அவர்களின் 98வது நினைவு வருடத்தை முன்னிட்டு    வீ.கே.வெள்ளையன் பிறந்த மண்ணில் இந்த ஞாபகார்த்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலீப், சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் வீ.சிவனேசன், உள்ளிட்ட சங்கத்தின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.photo-1 photo-2 photo-3 photo-4 photo-7

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com