நுவரெலியா நில அதிர்வு – 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது – மேலும் சில வீடுகள் பாதிப்பு

DSC02628கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் 07.08.2016 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாக இவ்வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.DSC02632

வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக உயர் ஆபத்துகளும், காயங்களும் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டுள வருகின்றனர்.

அந்த பிரதேசத்தில், புதிதாக தனியார் மற்றுமோர் மின் உற்பத்தி மையமொன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கான சுரங்க பாதைகள் அமைப்பதற்கான மலைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் போது, இந்த நில அதிர்வு நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.DSC02613

DSC02617

DSC02621

DSC02623

DSC02626

 

 

DSC02633

DSC02635

DSC02641

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds