நாட்டு மக்களின் எதிர் காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் 26.06.2016 அன்று காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்கூ ட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மது ஒழிப்பு தொடர்பாக கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் மது சம்மந்தமாக சிறந்த முறையிலான கட்டுரை, கவிதைகள் எழுதியவர்களுக்கும், மது ஒழிப்பு தொடர்பாக சேவையாற்றிய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கும் ஜனாதிபதியினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.