சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / நீரியல் வளத்துறை அமைச்சுக்கு எதிரான மனு மீண்டும் ஒத்திவைப்பு

நீரியல் வளத்துறை அமைச்சுக்கு எதிரான மனு மீண்டும் ஒத்திவைப்பு

கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி, வடமராட்சி பகுதியில் கடலட்டை தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக்கோரி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கான தடை உத்தரவை கடந்த வருடம் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வருடம், மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த 22-07-2020 அன்று, நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக கோரப்பட்டிருந்த நிலையில் அவ்வழக்கிற்கு நீரியல் வளத்துறை திணைக்களம் அதிகாரிகள் சமூகமளிக்காத காரணத்தால் இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்றும், நீதவான் விடுப்பில் சென்றுள்ளமையாலும் நீரியல் வளத்துறை திணைக்களஅதிகாரிகள் சமூகமளிக்காதமையாலும் மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு குறித்த வழக்கின் மீதான மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com