செல்களின் கவசம்: தண்ணீரின் அளவு உடலில் குறைந்தால், செல்களில் உள்ள ஈரப்பதத்தை உடல் எடுத்துக்கொள்ளும். பிறகு, நீர் பற்றாக்குறையால் சரும வறட்சி, உள்ளுறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து, ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள செல்களுக்குத் தந்து, அதன் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தத் தண்ணீர் உதவுகிறது.
சிறந்த நச்சு நீக்கி: வியர்வை, மலம், சிறுநீர் வழியாக உடல் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்குத் தண்ணீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட உணவைச் செரித்து, ஊட்டச்சத்துக்களைக் கிரகித்து, கழிவுகளை வெளியேற்றும் பணியை கல்லீரல், சிறுநீரகம் செய்கின்றன. உணவை நகர்த்திச் செல்லவும், உணவை செரிக்கவும் வைக்கும் செயல்முறைக்குத் தண்ணீர் அவசியம். போதுமான அளவு நீர் அருந்தாவிடில், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீர்க்கடுப்பு, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்னைகள் உண்டாகலாம்.

சமநிலைக்கு: மாறுகின்ற வானிலைக்கு ஏற்ப, உடலின் வெப்பம் மாறுபடும். உடலின் அதிகப்படியான வெப்பத்தை வியர்வை மூலம் உடல் தணித்து, குளிர்ச்சித் தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது. அதிகப்படியான வியர்வை வெளியேறும்போது நீர் வறட்சி (Dehydration) ஏற்படும். இதனால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும். எனவே, உடலின் தண்ணீரைக் கவனிப்பது அவசியம்.
சரும பொலிவுக்கு: சருமம் சுவாசிக்கத் தண்ணீர் அவசியம். ஏ.சி அறையிலேயே இருப்பவர்களுக்குத் தாகம் எடுக்காததால், சிலர் நீர் அருந்தாமலே இருப்பார்கள். இதனால், சருமம் களையிழந்து, உதடு வறண்டு போகும். இது, உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்பதற்கான அறிகுறி.
சிறுநீரகத்தின் காவலன்: உடலில் போதுமான தண்ணீர் இல்லாவிடில், சிறுநீரகங்கள் பெரிதும் பாதிக்கப்படும். உடலின் நச்சுக்களை நீக்க வழியில்லாதபோது, சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். ரத்தத்தைச் சீராக்கி, அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தத் தண்ணீர் அவசியம்.
சுகாதாரமான தண்ணீர்: உணவகங்கள், வெளியிடங்களில் வாங்கிப் பருகும் நீர் சுத்தமானதாக இல்லாமல் போனால், கிருமிகள் வழியாக டைபாய்டு, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.
சுகாதாரமான தண்ணீர்: உணவகங்கள், வெளியிடங்களில் வாங்கிப் பருகும் நீர் சுத்தமானதாக இல்லாமல் போனால், கிருமிகள் வழியாக டைபாய்டு, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.

வாட்டர் பாட்டில் ப்ளீஸ்
கையில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். இது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் இருப்பது நலம். சிறுநீர் மஞ்சளாகவோ, அடர் மஞ்சளாகவோ இருந்தால், உடலில் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரோடு அந்த நாளைத் தொடங்குங்கள். தண்ணீரை ஒரே நேரத்தில் மடமடவென்று குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் குடிப்பதே சரி.
எது நல்ல தண்ணீர்?
பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீர் ஆகியவற்றில் சத்துக்கள் நீக்கப்பட்டு, செயற்கைச் சத்துக்கள் கலந்து விற்கப்படுவதால், எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என உறுதியாகச் சொல்ல முடியாது. நம் நிலத்தடி நீரே குடிக்க உகந்தது. நிலத்தடி நீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டி பிறகு, குடிப்பது பாதுகாப்பானது.
தண்ணீர் தேவை?
ஒரு நாளைக்கு 8-10 டம்ளர்கள் நீர் அவசியம். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வோர், உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்பவர்கள், வெயிலில் அலைபவர்கள் இன்னும் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தண்ணீராக மட்டுமின்றி, நீர் நிறைந்த காய்கறி, பழங்களின் மூலமாகவும் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.