சற்று முன்
Home / செய்திகள் / நீராவியடி அடாவடிக்கெதிராக பொங்கியெழுந்தது வவுனியா…

நீராவியடி அடாவடிக்கெதிராக பொங்கியெழுந்தது வவுனியா…

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைதுசெய்யகோரியும், இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வினோநோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, செந்தில்நாதன் மயூரன், எம்.பி.நடராஜா, நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம், நகரசபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சுயாதீன இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். என பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயாக ஆட்சியா, பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா, காவி உடையில் காடையர்களா, மதப்பிரச்சினையை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com