சற்று முன்
Home / செய்திகள் / நீதியாகவும், சுதந்திரமானவும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – மட்டு அரசாங்க அதிபர்

நீதியாகவும், சுதந்திரமானவும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – மட்டு அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகர சபை 9 மாநகர சபைகள் அடங்கிய 12 சபைகளுக்குமான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (08) மாலை அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

238 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக 901 பெண்கள் உட்பட 2736 பேர் போட்டியிடுகின்றனர். இம்முறை நடைபெறுகின்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 144 வட்டாரங்களும் 120 வட்டாரங்கள் கொத்தணி அடிப்படையில் 24 வாக்குச்சாவடிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளிலும் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 4437 உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பப்ரல், சீ.எம்.ஈ.வி.கபே, ரான்ஸ்பரன்சி இன்ரர்நசனல் ஆகிய நிறுவனங்கள் ஈடுபடுகின்றன என்றும் மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்தும் முடிவுகள் பெறப்பட்டு, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலுள்ள மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் நிலையத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையின் பஸ்கள் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றையதினம், தூர இடத்தில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதுக்கு வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதுக்குரிய பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தமது வாக்குகளை அளிக்க முடியும். பொது மக்கள் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை தவறாமல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் தமது அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று தமது வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

 

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com