நீதியமைச்சர் தலதா அத்துகோரள?

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளில், நீதியமைச்சின் பொறுப்புகள் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளைக்கு வழங்கப்படவுள்ளதாக, அரச வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

எனினும், புத்தசாசன அமைச்சுப் பதவியை அவரிடமே கையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லையென, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகையால், நீதியமைச்சு மட்டுமின்றி, புத்தசாசன அமைச்சும் கைமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறியமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com