நீதியமைச்சராக தலதா – புத்த சாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம !

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வௌிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நீதியமைச்சராக வௌிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவும், புத்தசாசன அமைச்சராக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டிற்காக விஜயதாஸ ராஜபக்‌ஷவை அவரின் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி நேற்று ஏற்றுக் கொண்டிருந்தார்.

அதன்படி ஏற்பட்ட அமைச்சுப் பதவி வெற்றிடத்திற்கு இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com