நீதிமன்ற விடயங்களில் விளையாட்டு தனமாக செயற்படவேண்டாம் குற்றப்புலனாய்வுப் பொலிசாருக்கு எச்சரிக்கை

நீதிமன்ற விடயங்களில் விளையாட்டு தனமாக செயற்படவோ பொய் கூறவோ வேண்டாம் என குற்றப்புலனாய்வுப் பொலிசாருக்கு கடும் எச்சரிக்கைவிடுத்துள்ள ஊர்காவற்துறை நீதவான் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை, நீதவான் எம். எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப் பட்டது. அதன் போது வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பத்து சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் போது நீதவான் , கடந்த வழக்கு தவணையின் போது நான் கூறாத விடயத்தை கூறியதாக எவ்வாறு வெளியில் நீங்கள் தெரிவிக்க முடியும். என குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர்கள் பதிலளிக்காததை அடுத்தே அவ்வாறு நீதவான் எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் 9 ம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அதுவரையில் பத்து சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com