நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வட மாகாண பேரூந்துகள் பணி புறக்கணிப்பு!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகத்தினை கண்டித்து வட மாகாண தனியார் பேரூந்துகள் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசியல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.

நீதித்துறைக்கே இந் நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

நீதிபதியின் மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையளர்களாகிய நாம் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இதன்போது வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள், சமூக அக்கறைகொண்ட சங்கங்களையும் எம்முடன் இணைந்து அன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com