தாக்குதல் சம்பவம் புலிகளை ஞாபகப்படுத்துகின்றது! – மகிந்த ராஜபக்ஷ

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலச் செயற்பாட்டைத் தனக்கு ஞாபகப்படுத்துவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொந்தகல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

மேலும் அவர்தெரிவிக்கையில், ‘நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரண விடயமாகக் கருதக்கூடாது. நாட்டின் சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டி பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு உண்மை கண்டறியப்படவேண்டும்.

கொழும்பில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றால் அது பாதாள உலகக் கும்பலைக் குறிப்பிடமுடியும். ஆனால் வடக்கில் அப்படியில்லை. விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலத்தில் இவ்வாறே நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com