நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை வட மாகாண சட்டத்தரணிகள் கடுமையாக கண்டிக்கின்றனர்!

22.07.2017 அன்று நடைபெற்ற சூட்டு சம்பவம் தொடர்பிலான அறிக்கை!

யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு சட்டத்தரணிகள்  சங்கத்தைசேர்ந்த நாம் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களின்  உயிருக்கு பாரதூரமான ஆபத்தை ஏற்படுத்திய 22.07.2017  அன்று நடைபெற்ற சூட்டு சம்பவம்  தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும்  கடும்  கண்டனத்தையும்  தெரிவித்துக்  கொள்கின்றோம்.

நீதிபதிசரத் அம்பேபிட்டியஅவர்கள் 2004இல் படுகொலைசெய்யப்பட்டதன் பின்னர் நீதித்துறையின் சுயாதீனத்திற்குஏற்பட்டமிகவும் பாரதூரமானசவாலாகமேற்படிசம்பவத்தைநாம் கருதுகிறோம். இக்கட்டான இந்தசூழலில் கௌரவ இளஞ்செழியன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நாம் எமதுமுழுமையானஆதரவைதெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்படிசம்பவத்தில் கடமையின் போதுதனதுஉயிரை இழந்த உப பொலிஸ் பரிசோதகர் திரு. ஹேமச்சந்திரவின் மறைவிற்குஅவரதுகுடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமதுஆழ்ந்த இரங்கல்களைதெரிவித்துக் கொள்கின்றோம். திரு. ஹேமச்சந்திரவின் சேவைக்குநாம் தலைவணங்குகிறோம். சம்பவத்தில் காயமுற்றதிரு. ரத்னவிமலசிறியின் உயரியசேவையைபாராட்டுவதோடுவிரைவில் அவர் குணமடையவேண்டும் எனவும் வேண்டுகிறோம்.

மேற்படிசம்பவம் தொடர்பிலானவிசாரணைகளை பொலீஸ் திணைக்களம் தமது தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு ஏற்பநடந்துகொள்ளவேண்டுமெனநாம் வலியுறுத்துகின்றோம்.

இது வரைநடை பெற்றசம்பவங்கள் தொடர்பில் சிலசிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளகருத்துக்கள் தொழிலுக்குரியநெறிமுறைகளிற்கு ஏற்பஅவர்கள் நடந்து கொள்கிறார்களா என்றகரிசனையைஎம்மத்தியில் உருவாக்குகின்றது.

சகலகோணங்களில் இருந்தும் விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் எந்தவொருவிடயத்தையும் தவிர்க்காதுவிசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். நேற்று இடம்பெற்றசம்பவம் கௌரவநீதிபதிவிசாரித்த,விசாரித்துவரும் பாரதூரமானகுற்றவியல் வழக்குகளுடன் தொடர்புபட்டவைஎன பொதுசனஅபிப்பிராயம் கருதுகின்றது.

இப்பொதுசன அபிப்பிராயம்  நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நம்பிக்கை,சட்டத்தின் ஆட்சிஆகியனதொடர்பில் பாராதூரமானதாக்கத்தைஏற்படுத்தும் தன்மையானது.

எனவே மிகவிரைவாகமுறையானவிசாரணைநடாத்தப்பட்டுஉண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். குற்றவாளிகள் பொறுப்புக் கூறவும் வேண்டும். மேலும் எல்லாமட்டங்களிலும் நீதிபதிகளின் பாதுகாப்புமேம்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேற்படிவிடயங்களைவலியுறுத்திதீர்ப்பாயத்தைப் பாதிக்காதவகையில் நாளை(24.07.2017) நாம் நீதிமன்ற வேலைகளை புறக்கணிப்போம். இத்தீர்மானத்தால் பொதுமக்களிற்குஏற்படும் அசௌகரியத்திற்குநாம் வருந்துகிறோம்.

செல்வி. சாந்தாஅபிமன்னசிங்கம்
வடபிராந்தியத்திற்கான உப-தலைவர்
இலங்கைசட்டத்தரணிகள் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com