நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 வருடங்களாக மெய்ப் பாதுகாவலராகக் கடமையாற்றிய மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன (54) நேற்று(22)  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயிற்றில் பலத்த காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில் சிகிச்சை பலனின்றி இன்று(23) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்துக்கு நல்லூர் பின்வீதியில் மர்மநபர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதலின்போது நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் காயமடைந்ததுடன் ஒருவர் வயிற்றில் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரியை தீவகப் பகுதியில் வைத்து பொலிஸாரால்  கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com