சற்று முன்
Home / செய்திகள் / “நீங்கள் புலிகளை மீட்க வந்தீர்களா” – பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் முயற்சி – பொலிஸ் வேடிக்கை

“நீங்கள் புலிகளை மீட்க வந்தீர்களா” – பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் முயற்சி – பொலிஸ் வேடிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள், அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தியது நிலையிலும் அங்கு நிற்றுருந்த பொலிஸாரும் கைகட்ட வேடிக்கை பார்த்தமை பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போதே குறித்த தர்க்கம் ஏற்பட்டது.

சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் , பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலை மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு நின்றுருந்த அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியியலாளர்களுடனும் அச்சுறுத்தலிருந்தனர்.

இதேவேளை குறித்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com