நிலமற்றவர் நலன்களிலும் கரிசனை அவசியம் – நிருபா குணசேகரலிங்கம்

landless people's kilinochchi (5)

போரின் பின் நில உரிதாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகையில் அந் நிலங்களில் குடியிருக்கும் நிலமற்றவர் நலன்களிலும்  கரிசனை அவசியம்

ஆட்­சி­யு­ரிமை சட்­ட­மூலம் அண்மையில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் யுத்த காலத்தில் தமது நிலை­யான சொத்தின் உரித்­தினை இழந்­த­வர்கள் சொத்து உரித்­தினை மீள நிலை­நாட்ட வழி­ஏற்­ப­டு­கின்­றது. தமது சொத்­து­ரி­மை­யினை நிலை­நாட்டும் பொருட்டு வழக்­கினைத் தாக்கல் செய்­யக்­கூ­டிய அனு­ம­தியை விசேட ஏற்­பா­டுகள் அடங்­கிய இச் சட்­ட­மூலம் கொடுக்­கின்­றது. அதா­வது 1983 ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­திக்குள் சொத்­துக்­களை இழந்­த­வர்கள் பற்­றியே இங்கே பேசப்­ப­டு­கின்­றது.

குறிப்­பிட்ட ஒரு காணியில் ஒருவர் தொடர்ச்­சி­யாகக் குடி­யே­றி­யி­ருந்தால் அக் காணியின் உரிமை அவ­ரையே சாரும் என்றே முன்னர் சட்­டத்தில் காணப்­பட்­டது. இதுவே ஆட்­சி­யு­ரிமை (pசநளஉசipவழைn) எனப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றாக ஒரு­வரின் காணியில் குடி­யே­றி­யுள்­ள­வ­ருக்கு தான் வசிக்கும் காணி உரித்துச் சென்­ற­டை­வ­தற்கு சில நிபந்­த­னைகள் இரு­கின்­றன. அதா­வதுஇ உரிமை கோர­லுக்கு முன் தொடர்ச்­சி­யாக பத்து வரு­டங்கள் குறிப்­பிட்ட காணியில் உரிமை கோரு­பவர் குடி­யி­ருக்க வேண்டும். அடுத்­ததுஇ காணியில் வசிப்­பவர் தான் காணியில் வசிப்­ப­தற்கு பிர­தி­ப­லன்­களை காணி உரி­மை­யா­ள­ருக்குக் உரி­மை­யாண்­மைக்­காக செலுத்­தி­யி­ருக்கக் கூடாது. காணியில் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளாக உள்­ள­வர்­க­ளுடன் காணியின் அக்­க­றை­யு­டைய வெளி­ந­பர்கள் யாரா­வது காணியின் இருப்புத் தொடர்பில் பிணக்­கு­களில் ஈடு­பட்­டி­ருக்கக் கூடாது. இவையே நிபந்­த­னை­க­ளாகும். இவற்­றுக்கு அப்பால் அரச காணி­க­ளுக்கும் நம்­பிக்கைப் பொறுப்பின் கீழுள்ள காணி­க­ளுக்கும் மேற்­கு­றித்த ஆட்­சி­யு­ரிமை விடயம் பொருந்­தாது.

இவ்­வா­றாகக் காணப்­பட்ட ஆட்­சி­யு­ரிமை தொடர்­பான விட­யத்தில் தற்­போது மாற்றம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. அதா­வதுஇ போர் வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்டு காணி­களை இழந்­த­வர்கள் மீளவும் தமது உரித்­தினை நிலை­நாட்ட வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதற்­கா­கவே யுத்த காலத்தில் காணி­களை இழந்­த­வர்­க­ளுக்­கான விசேட ஏற்­பாடு ஆட்­சி­யு­ரிமைச் சட்டமூலம் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாதச் செயற்­பாடு கார­ண­மாக நீதி­மன்­றத்தில் தமது உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­வ­தற்கு அல்­லது தம்மைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு இய­லாது இருக்­கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்­கொள்ள வேண்­டிய விசேட ஏற்­பா­டுகள் நேர்­வி­ளை­வான கரு­மங்­களை இயலச் செய்­வ­தற்­கான சட்டமூலமே இது எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இச் சட்­ட­மூ­லத்­திற்கு முன்னர் 10 வரு­டங்கள் ஒருவர் வேறொ­ரு­வரின் அசையா சொத்­தினை அனு­ப­வித்­தி­ருந்தால்இ அனு­ப­வித்­தவர் அச் சொத்­தினை உரி­மை­யாக்கிக் கொள்­ளலாம். இந் நடை­முறை போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யற்ற விட­ய­மா­கவே உள்­ளது. காரணம்இ யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் விரும்­பியோ விரும்­பா­மலோ பலரும் தமது சொத்­துக்­களை பிரிந்து வெவ்ேவறு நாடு­க­ளிலும் இடங்­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­தனர். இன்றும் அவர்கள் மீளத்­தி­ரும்­ப­வில்லை. வடக்குக் கிழக்­கினைப் பொறுத்­த­ளவில் காணி உரித்­து­டையோர் தங்கள் காணி­களை பரா­ம­ரிப்­ப­தற்­கான அவ­கா­சமும் போர்க்­கா­லத்தில் கிட்­ட­வில்லை.

இச் சட்டம் பற்றி நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ குறிப்­பி­டு­கையில்இ பயங்­க­ர­வாத செயற்­பாடு கார­ண­மாக தற்­போது நீதி­மன்­றத்தில் தமது உரி­மை­களை நிலை­நாட்ட முடி­யாது இருக்­கின்ற மக்­க­ளுக்கு பாது­காப்பு அளிக்­கின்ற சட்ட மூல­மாக இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். இச் சட்­டத்தில் பயங்­க­ர­வாத செயற்­பாடு என்­ப­தனை வரை­வி­லக்­கணப் படுத்­து­வ­தற்கு 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்­க­ர­வாத நிதி­ய­ளிப்­பினை ஒடுக்­குதல் மீதான சம­வா­யத்தில் கொடுக்­கப்­பட்­டுள்ள அர்த்­தப்­ப­டுத்தல் பொருந்தும் என சட்ட மூலத்­தினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்கும் போது அவரால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச் சட்­ட­மூல விவா­தத்­தினில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான சுமந்­திரன்இ பயங்­க­ர­வாத குழுவின் செயற்­பாடு கார­ண­மாக தமது சொத்து தொடர்பில் நீதி­மன்­றத்­தினை நாட­மு­டி­யாது போனமை தொடர்பில் நிரூ­பிப்­பதில் காணி­யு­டை­மை­யா­ளர்­க­ளுக்கு சிக்­கல்கள் இருப்­ப­தாகச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­யி­டத்து 1983 கல­வ­ரங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் நிவா­ரணம் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை­யுள்­ள­மை­யி­னையும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இச் சட்­ட­மூலம் வடக்கு மக்­க­ளுக்கே அதி­கப்­ப­டி­யாக தொடர்­பு­டை­ய­தா­கின்­றது. அந்த வகையில் இது தொடர்­பான வடக்கு நிைல­வ­ரங்கள் பற்றி விசே­ட­மாக இவ்­வி­டத்தில் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. சட்­ட­மூல விவா­தத்தில்இ இச்­சட்டம் வாயி­லாக தமது காணி உரித்­துக்­களை பாது­காக்க முனை­வோ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த கால அவ­கா­சத்­தினை ஒரு­வ­ரு­டத்தில் இருந்து அதி­க­ரிக்க ஜே.வி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் கோரி­யி­ருந்தார்.

இத­ன­டிப்­ப­டையில் நட­வ­டிக்­கைக்­கான காலப்­ப­குதி இரண்டு வரு­டங்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளன.
இச் சட்­ட­மூ­லத்தில் குறிப்­பி­டப்­ப­டு­வது போல் மக்கள் நியாயம் பெற வேண்­டு­மாயின் அதற்­காக போதிய கால அவ­காசம் வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பலர் புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளாக உள்­ளனர். மேலும் பலர் இடம்­பெர்ந்­த­வர்­க­ளாக உள்­ளனர். இந் நிலையில் தமது ஆவ­ணங்கள் சக­ல­தையும் அவர்கள் இழந்­த­வர்­க­ளா­கவும் வாழ்ந்து; வரு­கின்­றனர்.

எனவே அவ்­வா­றா­ன­வர்கள் இச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் பய­ன­டை­வ­தாயின் அர­சாங்கம் மக்கள் இழந்து போன காணி ஆவ­ணங்­களை வழங்­கு­வ­தற்­கான விரைவுப் பொறி­முறை ஒன்றை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும். இது கட்­டா­ய­மா­னது.

இச் சட்ட மூலத்­தினைச் சமர்ப்­பிப்­பதன் ஊடாக அர­சாங்கம் யுத்தம் இடம்­பெற்ற வடக்குக் கிழக்­கிற்கு வெளி­யி­லுள்ள வசதி படைத்­த­வர்­க­ளுக்கு ஓர் அர­சியல் சமிக்­ஞை­யினைக் காட்­டு­கின்­றது. அதா­வதுஇ உங்­க­ளது சொத்­தக்­களை பாது­காப்­பதில் அர­சாங்கம் அக்­க­றை­யுடன் உள்­ளது என்­ப­துவே அச் சமிக்­சை­யாகம். இதன் வாயி­லாக புலம்­பெ­யந்து உள்­ள­வர்­களின் முத­லீ­டு­களை நாட்­டிற்குள் வர­வ­ழைக்கும் உத்­தி­யி­னையும் அர­சாங்கம் கொண்­டுள்­ளது.

காணி உடை­ய­வர்கள் மீது கவனம் செலுத்தும் அர­சாங்கம் அதே­போன்­ற­தொரு கரி­ச­னை­யினை காணி இன்றி வேறொ­ரு­வரின் காணியில் குடி­யே­றி­யி­ருப்போர் விட­யத்­திலும் செலுத்த வேண்டும். காணி­யு­டமை இன்றி வேறு ஒரு­வரின் உரித்தில் உள்ள காணி­களில் வசிப்­ப­வர்­களும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளே­யாவர். அவர்­களை சரி­யாகக் கையா­ள­வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கு உள்­ளது. காணி­களில் குடி­யே­றி­யுள்­ள­வர்­களை வெளி­யேற்றி அக் காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்கும் போது நிர்க்­க­தி­யாகும் இம் மக்கள் பற்றி முன்­னெச்­ச­ரிக்­கை­யா­கவே தீர்­வுத்­திட்­டங்­களை அர­சாங்க நிரு­வாகம் ஏற்­ப­டுத்த வேண்டும்.

குறிப்­பாக வன்னி மாவட்­டங்­களை எடுத்­துக்­கொண்டால் அங்கு 1970 காலப்­ப­கு­தியில் சிறி­மாவோ அர­சாங்கம் மத்­திய வகுப்புத் திட்டம்இ படித்த வாலிபர் திட்டம்இ படித்த மகளிர் திட்டம் போன்­ற­வற்றின் அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கி­யது. இவ்­வாறு வழங்­கப்­பட்ட காணி­களில் அதன் அநேக உரி­மை­யா­ளர்கள் குடி­யி­ருக்­காது வச­தி­வாய்ப்­புக்­களைத் தேடியும் போர்ச்­சூழ்­நிலை கார­ண­மா­கவும் வேறு இடங்­க­ளுக்குச் சென்­றுள்­ளனர். இவ்­வாறு விட்டுச் செல்­லப்­பட்ட காணி­களில் மலை­ய­கத்தில் இருந்து இனக்­க­ல­வ­ரங்­களால் பாதிக்­கப்­பட்ட நிலையில் வடக்கு நோக்கி இடம்­பெ­யர்ந்து வந்­துள்ள மக்­களில் பலர் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் குடி­யே­றி­யுள்­ளனர்.

இக் காணி­களில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாத்­திரம் 3 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட (3101) குடும்­பங்­களும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட(5300) குடும்­பங்­களும் வசித்து வரு­கின்­றன. இவர்­களில் அனே­க­ருக்கு இச் சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் சிக்­கல்கள் ஏற்­ப­டலாம்.

அர­சாங்கம் நீதியை நிலை­நாட்­டு­கின்ற அதே­வேளை சமூகத் தாக்­கங்கள் குறித்து ஆராய வேண்­டிய பொறுப்­பிலும் அதிகம் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. தற்­போது திடீ­ரென வெளி­நா­டு­களில் இருந்தோ அல்­லது யுத்தம் இடம்­பெற்ற மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் இருந்தோ காணி­யு­ரித்­துக்­களைக் கொண்­டி­ருந்­த­வர்கள் வருகை தந்து தமது காணி­களை விடு­விக்கக் கோரி நீதி­மன்­றத்­தினை நாடக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் அதி­க­மாக இச் சட்­டத்தின் பிர­காரம் உள்­ளன. அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில், காணி­களில் உரி­மை­யின்றி குடி­யி­ருப்­ப­வர்கள் வெளி­யேற்­றப்­பட வேண்­டியும் வரலாம். அவ்­வாறு காணி­களில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டு­ப­வர்­களை கையா­ளு­வ­தற்­கான நலத்­திட்­டங்கள் பற்றி அர­சாங்கம் ஏலவே தீர்­மா­னித்­தி­ருப்­பது அவ­சியம். இது பற்றி இன்­றைய நிலையில் தீர்க்­க­மான கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.
தற்­போதும் வடக்கில் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி­களில் இரா­ணுவம் தங்­கி­யுள்­ளது. இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் காணிகள் முழு­மை­யாக தற்­போதும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. இதனால் மக்­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் வேறு நபர்­களின் காணி­களில் தான் கொட்­டில்­களை அமைத்து வழ்ந்து வரு­கின்­றனர். உதா­ர­ண­மாகஇ வலி­காமம் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மக்­களின் நலன்­புரி நிலை­யங்கள் கூட தனி­யாரின் காணி­களில் தான் இயங்­கு­கின்­றன. வலி­காமம் வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்­டு­களின் பிற்­பாடு வெளி­யே­றிய மக்கள் வேறு தனி­யாரின் காணி­க­ளி­லேயே பல ஆண்­டு­க­ளாக அவல வாழ்வு வாழ்­கின்­றனர். வலி­காமம் வடக்கு நிலங்கள் முழு­மை­யாக விடு­விக்­கப்­படும் வரை இந்த நிலை தொடரும்.

இவ்­வா­றாக சூழ்­நிலை காணப்­ப­டு­கையில்இ ஆட்­சி­யு­ரிமை சட்டம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு காணி­யு­டை­மை­யா­ளர்கள் கணி­ச­மா­ன­வர்­க­ளுக்கு ஏற்­படும் போது அவர்கள் தமது காணியின் உரித்­தினை நிலை­நாட்ட முனைவர். காணி உரி­மை­யா­ளர்கள் தமது நிலங்­களில் இருந்து இடம்­பெ­யர்ந்து தங்­கி­யி­ருப்­போரை விரை­வாக குடி­யெ­ழுப்ப வேண்டும் என்று முயற்­சிப்பர். இதனால் இது கால­வ­ரையில் வேறு நபர்­களின் காணி­களில் குடி­யி­ருப்போர் குடி­யே­ழுப்பப் படலாம். எனவே இதனால் இடம்­பெ­யர்ந்த மக்­களில் கணி­ச­மா­ன­வர்கள் பாதிப்­ப­டை­யவும் கூடும். இவ்­வா­றாக எழக்­கூ­டிய பாதிப்­புக்­களை உணர்ந்து வலி­காமம் வடக்கு உள்­ளிட்ட இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களை மிக விரைவில் அர­சாங்கம் விடு­விக்க வேண்டும்.

மேலும், வடக்கில் ஏரா­ள­மான நிலங்கள் பாவ­னை­யற்று இருக்­கின்­றன.இதற்குக் காரணம் காணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளா­க­வுள்ளோர் பலர் பல தசாப்­தங்­க­ளுக்கு மேலாக வெளி­நா­டு­களில் வசிக்­கின்­றனர். காணிகள் பயன்­பா­டின்றி காணப்­ப­டு­கின்­றமை வடக்கின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்குத் தடை­யா­க­வுள்­ளது. இவ்­வா­றான நிலங்­களின் உரி­மை­யா­ளர்கள் இச் சட்­டத்தின் பின்னர் ஒரு சில வழி­களில் விழிப்­ப­டை­யவும் வாய்ப்­புள்­ளது. அதா­வது தாங்கள் இச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்டு எதிர்­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தங்கள் காணி ஆட்­சி­யு­ரித்­தினை நிரு­பிக்­க­வேண்டும். அல்­லது அந்த நிலத்தில் குடி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நிலங்கள் சேர்ந்து விடுமோ என்ற அச்சம் ஓர் விழிப்புணர்வினை நிலச் சொந்தக்காரர் மத்தியில் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

போர் காலப்பகுதியில் வெளியேறிய வசதிபடைத்த பலர் வடக்கில் ஏக்கர் கணக்கில் காணிகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நிலங்களில் வசதி குறைந்த மக்கள் குடியிருக்கின்றனர். இவ்வாறாகக் குடியிருப்போரில் சிலர் எதிர்காலத்தில் தாம் குடியிருக்கும் காணிகள் தமக்கு உரித்தாகச் சேரும் எனநினைக்கின்றனர். சம நேரத்தில் காணி உரிமையாளர்கள் எப்போதாவது தாம் வடக்கிற்கு வந்து தமது காணி உரிமையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என நினைக்கின்றனர். இதனால் உற்பத்திக் காரணிகளில் ஒன்றான காணி, வடக்கில் சரியாகப் பயன்படுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது. இந்நிலைமைகளிலும் இச் சட்ட மூலத்தில் அளிக்கப்பட்டுள்ள 2 வருடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்ற மட்டுப்பாடு விழிப்பணர்வையும் மாற்றங்களையும் ஏற்படுத்தலாம்.

எனவே போருக்குப் பின்னர் சரியான ஓர் பொருளாதாரக் கொள்கையினை வகுப்பதற்கு காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அவ்விடத்தில் காணிகளின் உரிமையாளர்களுக்கோ அல்லது இக் காணிகளில் நீண்டகாலம் வதிவிடத்தினைக் கொண்டுள்ளவர்களுக்கோ பாதிப்புக்கள் ஏற்படாமல் அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வினை முன்வைக்கவேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.

landless people's kilinochchi (1)
landless people's kilinochchi (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com