சற்று முன்
Home / செய்திகள் / நிலங்கள் விடுவிப்பு – கடற்படை இணங்க மறுப்பு

நிலங்கள் விடுவிப்பு – கடற்படை இணங்க மறுப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் இராணுவம் பல சாதகமான பதில்களை தெரிவித்தபோதும் கடற்படைநினர் எந்தவொரு முகாமின் நிலத்தையும் வழங்குவதற்கு சம்மதம் வழங்க மறுத்துவிட்டனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பில் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுயில் கட்டுவன் அச்சுவேலி பாதையினை திறப்பதோடு குரும்பசிட்டியில் எஞ்சியுள்ள நிலத்தினையும் அதேபோன்று பலாலி வீதிக்கு கிழக்குத் திசையில் உள்ள மக்கள் நிலத்தினையும் விடுவிக்க வேண்டும். அதேபோன்று மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் விடுவிக்கப்பட்டபோதும் மிக நெருக்கமாகவே இராணுவ வேலிகள் உள்ளன. அதனால் அவற்றை மேலும் பின்னகர்த்துவதே மாணவர்களின் இயல்பான கல்விக்கு வழி ஏற்படுத்த முடியும். அதேபோன்று வலி . வடக்கு இராணுவக் கட்டுப்பாட்டுப் பபுதிக்குள் மேலும் 5 பாடசாலைகள் உள்ளன. அவற்றினையும் விடுவிக்க வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராயா கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி பிரதேச விடுவிப்புத் தொடர்பில் ஆராயப்படுகின்றது. பாடசாலைகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் விடப்பட வேண்டும் . என ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார். அதேநேரம் இதுவரை கலைமகள் பாடசாலையை விடுவிக்குமாறு கோரினீர்கள் விடுவிக்கப்பட்டதும் சூழ உள்ள பிரதேசங்களையும் போருகின்றீர்கள். எனப் பதிலளித்தார்.

வடமராட்சிப் பகுதியில் 7 இராணுவ முகாம்கள் உள்ள நிலையில் இதில் 4 பாரிய முகாம்களிற்காக பல மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதோடு அருகில் உள்ள அரச நிலங்களையும் இணைத்தே படைமுகாம்கள் உள்ளன. அதில் தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் உடன்னியாக விடுவிக்கப்பட வேண்டும். அவை விடுவிப்பதற்கு தாமதம் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள அரச நிலத்தினை மட்டும் வைத்திருந்தால் முகாமின் அளவு சிறிதாகுமே அன்றி உடனடியாக விலக வேண்டிய நிலமை இல்லை. அதனால் அப் பகுதியில் உள்ள தனியார் நிலங்கள் அனைத்தையும் உடன் விடுவிக்க வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

வடமராட்சி பகுதியில் உள்ள படைமுகாம்களின் தனியார் நிலத்தை வழங்குவதில் அதிக நெருக்கனி இருக்காது. ஏனெனில் அப் பகுதிகளில் பல அரச காணிகள் உண்டு. ஆனால் படை முகாம்களை இடம்மாற்றுவதற்காக அதிக செலவு ஏற்படுகின்றது. அதற்கான நிதியினை கிடைக்க வழி ஏற்படுத்மி தந்தால் அவையை விடுவிக்க முடியும் என யாழ்மாட்ட தளபதி தெரிவித்தபோது அடுத்த ஆட்டும் பாதுகாப்பு அமைச்சிற்குதானே அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். அந்த நிதியில் இதற்கும் பெற்றுக்கொண்டு நிலத்தை விடுவிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இதனையடுத்மு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சபைநின் காணியும் மற்றுமோர் இடத்தில் மக்கள் குடியிருப்பின் நடுவே உள்ள இராணுவ முகாமையும் அகற்றி சபைநின் செயல்பாட்டிற்கு உறுதுணையளிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் அச்சுவேலி ப.நோ.கூ.சங்கத்தின் நிலம் , நிலாவரை பகுதியில் உள்ள சித்த மருத்துவத்துறையின் மூலிகைத் தோட்டத்தில் குடியிருக்கும் இராணுவ முகாம்களையும் அகற்றி அப்பகுதியை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இராணுவத்திடம் கோரிக்கை விடுத்தனர.

இதேநேரம் அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஓர் தாயாரின் 6 பரப்புக்காணி உள்ளது. அதனை விடுவிக்குமாறு அந்த தாயார் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கின்றார். அந்த 6 பரப்புக்காணி தொடர்பிலும் கரிசணைகொள்றுமாறு மாவட்டச் செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

இதேபோன்று தீவுப்பகுதியில் நெடுந்தீவு , வேலணை , மண்கும்பான பகுதிகளில் கடற்படையினர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களையும் காணிகளையும் பிடித்து வைத்திருப்பதனால் அவற்றினையும் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் காரை நகரில் மட்டும் 8 இடங்களில் கடற்படையினர் அதிக இடங்களை கையப்படுத்தி வைத்துள்ளனர். அதேபோல் காரைநகர் இந்துக் கல்லூரியின் 8 பரப்பெக் காணி உட்பட அப்பகுதிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் கோரிக்கை விடுத்தனர். டுஇவை எவற்றிற்கும் எந்தவிதமான உறுதியான முடிவுகள் எவற்றையும் கடற்படையினர் வழங்கவில்லை. இவை தொடர்பில் கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டு அதன் பதிலை அறிவிப்பதாக மட்டுமே அறிவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 90 கடற்படைத் தளம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com